ஆமாங்க வழக்கமா டீ தூள், பால் சேர்த்து செய்யப்படும் டீ மாதிரி இல்லாமல் வித்தியாசமா 20க்கும் மேற்பட்ட டீ வெரைட்டிகளுடன் ட்ரெண்டாகி வருகிறது திருச்சியில் உள்ள ஒரு கடை. திருச்சி கண்டொன்மெண்ட் அருகே இயங்கு அலிஃப் அரேபியன் சாய் கடை.
அரபி நாட்டில் தயாரிக்கப்படும் டீ வகைகளைப் போன்ற டீ மற்றும் நன்னாரி டீ, பைனாப்பிள் டீ, ஏலக்காய் டீ, கிராம்பு டீ, க்கவா டீ, கேஷுவ் நட் டீ என பல வகைகளில் வழங்கி மக்கள் மத்தியில் ‘டீ’யாய் பரவி வருகின்றனர். டீ வெரைட்டியில் மட்டும் தான் வித்தியாசமா என்றால் அது தான் இல்ல. வழக்கமா டீ கடை என்றதும் செம்பு கலர் பாய்லர் நினைவிற்கு வரும். இப்போது பல கடைகளிலும் கரி அடுப்புக்குப் பதிலாக கேஸ் பயன்படுத்துவதால் பாய்லர்கள் எல்லாம் பாராமுகமாகி விட்டன.
இதையும் படிங்க: டூரிஸ்டுகளை கவரும் மாமியார் மருமகள் கிணறு… வியக்க வைக்கும் வித்தியாசமான கிணற்றின் கதை…
ஆனால் இவர்கள் எல்லாவற்றுக்கும் ஒருபடி மேலே போய் சயின்ஸ் லேப் போல கண்ணாடிக் குடுவைகளாக வரிசைக்கட்டி வைத்து, அதில் பல டீக்களை போட்டு வழங்கி வருகின்றனர். இதற்காக இவர்கள் விஷேசமான கண்ணாடிக் குடுவையைப் பயன்படுத்துகின்றனர்.
அந்த கண்ணாடிக் குடுவையில் முந்திரி டீ, கொய்யா டீ, பைனாப்பிள் டீ, நன்னாரி டீ, ஏலக்காய் டீ என ஒவ்வொன்றும் கொதித்து வெளியேற்றும் ஆவியைக் கண்டதும் நமக்கு விதவிதமா டீ குடிக்க ஒரு அவா தோன்றிடும். இங்கு இவர்கள் தயாரிக்கும் டீ வகைகள் உடலுக்கு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு தயாரிப்பதாகக் கூறுகின்றனர்.
இதுகுறித்து கடையின் உரிமையாளர் முகமது ஜாஃபர் அலி கூறுகையில், “திருச்சியில் அலிஃப் டீ ஸ்டால்னு சொல்லி அதிக கிளைகள் வைத்திருக்கிறோம். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அரபிக் டீ கடை ஒன்று ஆரம்பித்திருக்கிறோம். இங்கு அரேபியன் ஸ்டைலிலும், ஆர்கானிக் வகை டீக்களும் கிடைக்கும்.
இதையும் படிங்க: அத்திப்பழம் சைவமா..? அசைவமா..? சத்துக்கள் நிறைந்த பழத்தைச் சுற்றும் சர்ச்சைகள்…
ஆர்கானிக் டீயில் முந்திரி, கொய்யா, அரேபியன் வகையில் ஏலக்காய், கிராம்பு, க்கவா டீ ஆகியவற்றைக் கொடுக்கிறோம். இங்கு க்கவா டீயுடன் பேரீச்சம்பழமும் கொடுக்கிறோம். பைனாப்பிள் டீ குடிப்பதால் புத்துணர்ச்சி கிடைக்கும். டீயில் கிராம்பு, ஏலக்காய் போடுவதால் தொண்டை பிரச்சனைகள் நீங்கும்.
இவை அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியமானது. இந்த நோக்கத்தில் இந்த கடையை அமைத்துள்ளோம். இந்த கடை திருச்சி மட்டுமல்லாது தமிழகத்தின் வேறு இடங்களில் கூட இந்த மாதிரியான டீ கடைகள் கிடையாது. இதுவே முதன்முறையாகும்” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Tiruchirappalli,Tamil Nadu
November 19, 2024 7:25 PM IST
