ஆனால் சினிமாவானது ஃபிலிம் கேமராக்கள் மூலம் படமாக்கப்பட்ட போது ஃபிலிம் அதிகம் செலவாவதைத் தவிர்ப்பதற்காகவும், நேர விரயத்தை தவிர்த்து படத்தைத் திட்டமிட்டபடி முடிக்க வேண்டும் என்பதற்காக ப்ரீ புரடக்ஷன் வொர்க்கில் ஸ்டோரி போர்டு ரெடி செய்வார்கள். இப்போது இந்த முறை தமிழ் சினிமாவில் வழக்கொழிந்து வருகிறது.
ஆனால் ‘இன்டர்ஸ்டெல்லர்’இன் ஸ்டோரி போர்டை இப்போது சினிமா விரும்பிகள் புரட்டித் தான் வருகின்றனர். ஆனால் ஒரு படம் எடுக்க வேண்டும், அதற்கான கதை, அதை நாம் எப்படி எடுக்க போகிறோம் என கற்க விரும்புபவர்களுக்கு இதுபோன்ற பிரபல படங்களின் ஸ்டோரி போர்டுகள் ஒரு லைப்ரரி போல.
டிஜிட்டல் மயமாதலில் இந்த முறை குறைந்து வந்தாலும் அதற்கான மவுசு மறைந்து விடாது என்பதை மெய்பிக்கும் வகையில் கோவையை சேர்ந்த ஓவியர் ஒருவர் இன்றளவு ஸ்டோரி போர்டுகளை தன் கைவண்ணத்தால் வரைந்து கொடுத்து வருகிறார்.
ஸ்டோரி போர்டு பற்றி ஓவியர் சிவா கூறுகையில், “நான் திரை படத்திற்கான ஸ்டோரி போர்டு வரைந்து தருகிறேன். இந்த ஸ்டோரி போர்டு எதற்காக பயன்படுகிறது என்றால், இயக்குநர்கள் கதை யோசித்து எழுதி இருப்பார்கள். ஆனால் அந்த படம் எப்படி வர போகிறது, எப்படி இருக்கும் என்கிற பதட்டம் அவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும்.
அதை நாம் முழுவதும் ஸ்டோரி போர்டாக வரைந்து கொடுத்தல் படம் எப்படி வர போகிறது என்று அவர்களுக்கு எளிதில் தெரிந்து விடும். திரையுலகிற்கு புதிதாக வரும் இயக்குநர்கள் தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லுவதற்கு இந்த ஸ்டோரி போர்டு பயன் உள்ளதாக இருக்கும்.
இதையும் படிங்க: IndiaPost Recruitment : 21,413 போஸ்ட் ஆபிஸ் காலியிடங்கள்… விண்ணப்பிப்பது எப்படி?
புதிதாக இந்த வேலைக்கு வருபவர்களுக்கு கதாபாத்திரம் எப்படி நிற்க வேண்டும், எப்படி நடிக்க வேண்டும் என்பதை கூட சொல்வதற்கு இது பயனுள்ளதாக இருக்கும். ஒரு மூன்று மணி நேரம் படம் எடுக்க போகிறார்கள் என்றால் சென்ற இடத்தில், இடம் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது என்று அதிக நேரம் எடுத்து விடுவார்கள். அதை குறைத்து எடுக்கவும் இந்த படம் எடுக்க கூட கூட்டி செல்பவர்களும் ஆகும் செலவு அதிகரிக்கும்.
அதற்கு மாறாக படம் எப்படி எடுக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே தெரிந்து விட்டால் செலவை குறைக்க உதவும் இதற்கு தான் இந்த ஸ்டோரி போர்டு பயன்படுகிறது. இதனால் புதிதாக வருபவர்களுக்கும் குறைந்த செலவில் திட்டமிட்டபடி படம் எடுக்க நினைப்பவர்களுக்கு இது மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
தமிழ் சினிமாவில் இருந்து பார்த்தால் படம் எடுக்கும் போது தெலுங்கில் இருந்தோ மலையாளத்தில் இருந்தோ மற்றும் வேறு இடத்தில் இருந்து கேமரா மேன், மற்ற ஊழியர்கள் வரும்பொழுது அவர்களுக்கு நாம் பேசுவது புரிய வைக்க மிகவும் கடினமாக இருக்கும். இப்போ நான் ஓவியத்தால் வரைந்து கொடுக்கும் பொழுது வெளியில் இருந்து வந்து படம் எடுக்க வருபவர்களுக்கு கேமரா ஆங்கிள் வைப்பது போன்றவை எல்லாம் எளிதில் புரிந்து விடும்.
இதையும் படிங்க: பள்ளியில் கல்வி மட்டுமல்ல கழனியும் சேர்த்து கற்றோம்… அசத்தும் கஞ்சிக்குழி அரசுப்பள்ளி…
இதில் ஜீப் வருவது, கேமரா திரும்புவது எல்லாம் இதில் இருக்கும்போது அவர்களுக்கு எளிதில் புரியும். தெலுங்கு சினிமா, மலையாள சினிமா போன்றவற்றில் இருந்து வந்தாலும் ஒரு ஓவியம் பார்க்கும்போது இதுதான் அந்த படம் என்று புரிந்து விடும். ஒரு குறைந்த அளவு பணத்தை வைத்து எடுப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த படம் எப்படி வரப்போகிறது என்று நமக்கு முன்பே தெரிந்து விடும்.” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Coimbatore,Tamil Nadu
February 12, 2025 12:50 PM IST
