Last Updated:
Covai Flower Show: மலர் கண்காட்சியில் வண்ண வண்ண மலர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள வடிவ அமைப்புகள் மக்களை வெகுவாக கவர்கின்றது.
கோவையில் நடைபெற்று வரும் 7வது மலர் கண்காட்சி மக்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மலர் கண்காட்சியை ஆர்வமாக கண்டுகளித்து புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள தாவரவியல் பூங்காவில் நடைபெறும் இந்த மலர் கண்காட்சியில் மலர்களின் ரகங்களையும், வண்ணங்களையும், அதன் அழகினையும் வணிக முக்கியத்துவத்தையும் உணர்த்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மலர் கண்காட்சி வரும் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மலர் கண்காட்சியில் பள்ளிக் குழந்தைகள், மாணவர்கள், பொதுமக்களைக் கவரும் வகையில் அமைப்புகள் இடம்பெற்றுள்ளன. இங்குள்ள மலர் அமைப்புகள் முன் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். இந்த மலர் கண்காட்சியில் மொத்தம் 2 லட்சம் பூக்களைக் கொண்டு கண்காட்சி நடைபெற்று வருகிறது.
செலோசியா, மல்லிகை, செண்டுமல்லி, சம்பங்கி, கனகாம்பரம், தாமரை, செவ்வந்தி, ஆஸ்டர், பெட்டூனியா, ஜினியா, டேலியா, சால்வியா, ரோஜா, கார்னேஷன், ஆர்க்கிட், ஆந்தூரியம், லில்லியம், ஜெர்பெரா, லிஸியான்தஸ், ஹெலிகோனியா, ஜிப்ஸோபில்லா, ஸ்டேடிஸ் மற்றும் சொர்க்கத்து பறவை போன்ற கொய் மலர் என சுமார் 2 லட்சம் மலர்களைக் கொண்டு இந்த மலர் கண்காட்சியில் வானவில், பட்டாம்பூச்சி உள்ளிட்ட பல்வேறு கலைநயம் மிக்க வடிவங்கள் அமைத்தும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த கண்காட்சிக்கு நுழைவு கட்டணமாகப் பெரியவர்களுக்கு 100 ரூபாயும், குழந்தைகளுக்கு 50 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Coimbatore,Tamil Nadu
February 11, 2025 9:36 AM IST
