தமிழகத்திற்கு வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் ரயில்கள் மூலம் போதைப் பொருள்கள் கடத்தி வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. அதனை தடுக்கும் விதமாக ரயில்வே காவல் துறையினருடன், போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் அவ்வப் போது ரயில்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோவைக்கு வரும்
ரயிலில் கஞ்சா கடத்துவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சேலத்தில் இருந்து கோவை வரை வந்த ரயில்களில் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது திப்ரூகர் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் விரைவு ரயில் கோவையில் சோதனை ஈடுபட்ட போது, பொது பெட்டியில் கேட்பாரற்று இருந்த பையை சோதனை செய்தனர். அப்பொழுது அதில் 8 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை கைப்பற்றிய ரயில்வே காவல் துறையினர். போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

