யானைக்கு அமைத்த மின்வெளியில் சிக்கி உயிரிழந்த கிளி - விசாரணையில் வனத் துறையினர்யானைக்கு அமைத்த மின்வெளியில் சிக்கி உயிரிழந்த கிளி - விசாரணையில் வனத் துறையினர்

கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளுக்குள் புகுந்து பயிரிடப்பட்டிருந்த பயிர்கள், வீடுகளில் வைக்கப்பட்டு உள்ள உணவுப் பொருள்கள் மற்றும் கால்நடைகளுக்கு வைத்து இருந்த தீவனங்களை தின்று சேதப்படுத்தி வருகிறது. அதனை தடுக்கும் விதமாக அப்பகுதி உள்ள விவசாயிகள் தோட்டங்களுக்குள் யானைகள் புகுந்து விடாமல் இருக்க, சிலர் மின்வெளி அமைத்து பயிர்களை பாதுகாத்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளிலும் திருட்டுப் போன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த மின் வேலி அமைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் கோவையில் இருந்து கேரளா மாநிலம் ஆனைகட்டிக்கு செல்லுகின்ற சாலையில் உள்ள மாங்கரை அருகே டைமண்ட் ஃபேக்டரி உள்ளது. அந்த வளாகத்தில் விவசாய பயிர்களும் பயிரிடப்பட்டு உள்ளது வனவிலங்குகள் மற்றும் திருடர்கள் உள்ளே வராமல் தடுப்பதற்கு அமைக்கப்பட்டு இருந்த மின்வேலியில் அப்பகுதியில் பறந்து கொண்டு இருந்த கிளி ஒன்று அந்த மின்சாரம் பாயும் வேலியில் அமர்ந்து உள்ளது. அப்பொழுது அந்த மின்வெலியில் பாய்ந்து கொண்டு இருந்த மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. இதுகுறித்து அப்பகுதிக்குச் சென்ற ஒருவர் இதுகுறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத் துறையினர் கிளியை கைப்பற்றினர். பின்னர் இரவு நேரத்தில் மின்சாரம் தாக்கி தான் கிளி உயிரிழந்ததா ? அல்லது பகல் நேரத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததா ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டத்தால் இரவு நேரங்களில் மட்டும் மின்வெலிகளில் மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும், பகல் நேரங்களில் மின்சாரம் பாய்ந்து தான் கிளி உயிரிழந்ததா ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *