இந்த சூழலில் மின்சார வாகனங்கள் மீதான மக்களின் நாட்டம் அதிகமாகி விட்டது. ஆனால் ஏற்கனவே பயன்படுத்தும் வாகனத்தை விட்டு புதிதாக லட்சங்களில் செலவு செய்து ஒரு புது வாகனத்தை வாங்குவதற்கும் மக்கள் மத்தியில் தயக்கம் நிலவுகின்றது.
இந்நிலையில் புவிக்கும் மக்களுக்கும் உதவும் வகையில் கோவையைச் சேர்ந்த AR4 tech நிறுவனம் எரிபொருளில் இயங்கக் கூடிய பைக், கார் போன்ற வாகனங்களை பேட்டரி உதவியால் மின் சக்தியில் இயங்கும் வாகனமாக மாற்றிக் கொடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: Sivagalai Excavation: மாணவர் கேட்ட அந்தக் கேள்வி… பதில் தேடிய ஆசிரியருக்குக் கிடைத்த வரலாற்றுப் பொக்கிஷம்…
இதனால் பழைய வாகனமே புது தொழில்நுட்பத்திற்கு மாறுவதோடு மட்டுமல்லாமல், தந்தை, தாத்தா பயன்படுத்திய வாகனம் என்ற மக்களுக்கு அந்த வாகனம் உடனான உணர்வு பிணைப்பும் காக்கப்படுகிறது.
இதுகுறித்து சிவசங்கரி கூறுகையில், “நான் AR4 tech கம்பெனி உடைய பவுண்டர் மற்றும் மேனேஜ்மென்ட் டைரக்டர். எங்கள் கம்பெனி கோயம்புத்தூரில் செந்தாம்பாளையம் பகுதியில் இந்த கம்பெனி வைத்து நடத்தி வருகிறோம். இங்கு என்ன பண்றோம் என்றால் பழைய வண்டிக்குப் புது விதமான முறையில் எலெக்ட்ரிக் முறையில் அந்த வண்டிக்கு வாழ்க்கை முறையை அதிகரித்து வருகிறோம்.
இது எப்படி சாத்தியம் என்று கேட்பீர்கள், இதற்கான அங்கீகாரம் பெற்றுச் செய்து வருகிறோம். என்ன மாதிரி வண்டி எல்லாம் அங்கீகாரம் பெற்றிருக்கிறோம் என்றால் ஹோண்டா ஆக்டிவா, டிவிஎஸ், சுசூகி ஆக்சிஸ், டிவிஎஸ் எக்ஸ்எல், இந்த நான்கு மாடல்களுக்கும் உரிமம் பெற்று இருக்கிறோம். இதற்கு ஸ்டேட் கவர்மென்ட் அப்ரூவல் என்று சொல்வார்கள். தமிழ்நாடு அப்ரூவல், கர்நாடகா அப்ரூவல் இரண்டும் எடுத்துப் பண்ணிக்கொண்டு இருக்கிறோம்.
இதையும் படிங்க: Kumari Great Wall: 25 கி.மீ. நீளத்தில் தமிழ்நாட்டில் ஒரு சீனப் பெருஞ்சுவர்… குமரியில் இப்படி ஒரு ஸ்பாட்டா..
எந்த வண்டியும் இப்படி மாற்ற முடியுமா என்றால் எந்த வண்டி என்றாலும் அதனுடைய சேஸிஸ் கண்டிசன் பார்த்து அதன் பிறகு தான் நாங்கள் அதைத் தயார் செய்வோம். மற்றும் ஏதாவது பொருள் மாற்றவேண்டும் என்றால் வண்டியின் உரிமையாளரிடம் சொல்லி அனுமதி பெற்றுக் கொள்வோம். அந்த வண்டியில் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் இருந்தால் ஒரே நாளில் மாற்றி எடுத்துச் செல்லலாம்.
வண்டியில் ஏதாவது பழுதடைந்த பொருட்கள் இருந்தால் அதை நாங்கள் வாங்கி மாற்றுவதற்கு வெளியில் போய் அந்த பொருட்களை வாங்கி ஒரு நாள் அல்லது ஏழு நாட்களுக்குள் வண்டியை மாற்றிக் கொடுக்க முடியும். ஒரு வண்டியை மாற்றுவதற்கான விலை, 50 கிலோ மீட்டர் தொலைவில் செல்லும் வாகனத்திற்கு 39 ஆயிரத்து 900 ரூபாய். இதனுடன் ஜிஎஸ்டி சேர்த்தால் 49,000 கிட்ட வரும். அதிகப்படியான மைலேஜ் வேண்டுமென்றால் 80 கிலோமீட்டர் செய்து கொள்கிறோம், அதுவும் எங்களால் செய்து கொடுக்க முடியும். அது 65 ஆயிரம் கிட்ட வரும்.
எத்தனை கிலோமீட்டர் தான் போகுமா என்று கேட்டால், நாம் மாற்றுவது பழைய வாகனம் ஆகவே அந்த வாகனத்தில் பேட்டரி வைக்கும் அளவிற்குத் தான் மாற்ற முடியும். இங்கு நாங்கள் மாற்றக்கூடிய பேட்டரி மிகவும் பாதுகாப்பான lfp பேட்டரி மற்றும் சோடியம் அயன் பேட்டரி தான் பயன்படுத்தி வருகிறோம். லித்தியம் பேட்டரி பயன்படுத்துபவர்களுக்கு அதிக மைலேஜ் கிடைக்கும். ஆனால் கூடிய விரைவில் வெயில் காலம் ஆரம்பிக்கப் போகிறது. அந்த பேட்டரியில் வெடிக்க ஆரம்பிக்கும்.
இதையும் படிங்க: Thread Art: மூலிகையில் உருவாகும் பெயிண்டிங்… நூலால் தைத்து ஓவியம்… அசத்தும் ஓவியக் கலைஞர்…
நாங்கள் மாற்றுவது லித்தியம் ப்ரோ பாஸ்பேட் பேட்டரியும், சோடியம் அயன் பேட்டரியும் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இதில் மைலேஜ் அதிகமான அளவில் கிடைக்காது. சோடியம் அயன் பேட்டரி பயன்படுத்தும் பொழுது கிடைக்கும் பலன்கள் என்ன என்றால் 90 டிகிரி வெப்பநிலையைத் தாங்கக் கூடியது. மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வரை தாங்க கூடியது.
மலைப்பகுதியில் இது போன்ற பேட்டரிகளை பயன்படுத்த முடியும். இதில் ஆக்சிடென்ட் ஏதாவது ஏற்பட்டால் பேட்டரி பாதிப்படையும், இப்பொழுது அதிகம் மழைப்பொழிவு இருப்பதால் வெள்ளம் வரும் நிலையில் இந்த பேட்டரி எந்த பாதிப்பும் இல்லாமல் பயனளிக்கும். இந்தப் பயன்கள் அதிகம் இருப்பதால் மைலேஜ் என்பது குறைவாகத்தான் கிடைக்கும். இந்த பேட்டரியை 10AM சாக்கெட் பயன்படுத்தி இதை எந்த இடத்தில் வேண்டும் என்றாலும் சார்ஜ் செய்து கொள்ளலாம். அந்த அளவிற்கு நாங்கள் தயார்படுத்தி கொடுக்கிறோம்.
இந்த பேட்டரியை தனியாக எடுத்து சார்ஜ் செய்யும் வகையில் நாங்கள் கொடுத்திருக்கிறோம் ஏனென்றால் பெரிய அப்பார்ட்மெண்ட் போன்ற குடியிருப்பில் இருப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வேணும் என்பவர்கள் இன்னும் பேட்டரி கூட எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். பால்காரர்களுக்கு நாங்கள் மாற்றிக் கொடுத்திருக்கிறோம். அவர்களுக்கு பேட்டரி வைக்க முடியாது என்பதால், பேட்டரியை ஃபேப்ரிகேட் செய்து கொடுத்திருக்கிறோம்.
இதையும் படிங்க: Subramaniapuram Song: கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்… காலம் கடந்தும் காதுகளில் ஒலிக்கும் காந்தக் குரலோன்…
இந்த வாகனத்தில் பயன்படுத்தும் முழு பேட்டரியும் மூன்று மணி நேரத்தில் சார்ஜ் ஏறிவிடும். இதற்கு தேவைப்படும் மின்சாரம் ஒன்று அரை யூனிட் முதல் இரண்டு யூனிட் வரை தான் செலவாகும். டொமஸ்டிக் சார்ஜிங்கில் மூன்று ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை தான் செலவாகும். யூனிட் என்பதால் ஆறு ரூபாய் முதல் 20 ரூபாய் உள் முழு சார்ஜ் ஆகிவிடும். நீங்கள் 50 கிலோ மீட்டர் ஆறு ரூபாய் செலவில் செல்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஆறு ரூபாய் என்பதும் அதிகப்படியாகச் சொல்லும் கணக்கு. நாம் பெட்ரோல் வாகனம் பயன்படுத்தும் பொழுது 50 கிலோமீட்டர் 100 ரூபாய் பெட்ரோல் போடுகிறோம் என்றால் நூறு ரூபாய் எங்கு உள்ளது? ஆறு ரூபாய் எங்கு உள்ளது என்று யோசித்துக் கொள்ளுங்கள்.
நாங்கள் ஸ்டேட் ட்ரான்ஸ்ஃபர் அப்ரூவல் வாங்கி இருக்கிறோம். தமிழ்நாட்டில் எந்த ஆர்டிஓ அலுவலகத்திலும் வாகனத்தின் க்ரீன் சர்டிபிகேஷன் வாங்கித் தர முடியும். எக்ஸாம்பிளுக்கு எங்கள் அலுவலகத்திலும் மாற்றிய வாகனம் உள்ளது. நாங்கள் மாற்றக்கூடிய நான்கு வாகனத்தில் ஏதுவாக இருந்தாலும் எங்களிடம் மாற்றிக்கொள்ளலாம்.
இதையும் படிங்க: 100 Year Old Watch: டைம் டிராவல் செய்ய ஆசைன்னா இங்க போங்க… காலத்துடன் கலந்த கடை… 35 ஆண்டு பாரம்பரியம்…
இதை பார்ப்பவர்களுக்கு அடுத்த சந்தேகம் இருக்கும். கோயம்புத்தூரில் இருப்பதால் நாங்கள் எங்கள் வாகனத்தை எப்படி கொண்டு வந்து தருவது. அதற்கு கொண்டு வரும் செலவு அதிகம் ஆகும்போது நீங்களே சொந்தமாகத் தொழில் செய்து கற்றுக்கொள்ளலாம்.
அதற்கான பயிற்சியும் நாங்கள் கொடுக்கிறோம். மூன்று நாள் பயிற்சி மற்றும் பத்து நாள் பயிற்சி என்று கொடுத்து வருகிறோம். ஒன்றுமே தெரியாமல் வருபவர்களுக்குக் கூட முழுதும் சொல்லிக் கொடுத்து, விதமாக தொழில் செய்யும் அளவிற்கு சொல்லிக் கொடுத்து வருகிறோம்.
வாகனத்தின் ஐசி, இன்ஜின் மற்றும் முழுதும் மாற்றித் தரும் அளவிற்கு அவர்களுக்குப் பயிற்சி கொடுத்து வருகிறோம். நாங்கள் அப்ரூவல் பெற்ற வாகனம் அனைத்தும் நாங்கள் சொல்லிக் கொடுத்து வருகிறோம். கவர்மெண்ட் நாம்ஸ் மூலம் செய்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Coimbatore,Tamil Nadu
February 17, 2025 8:02 PM IST
