அப்படி நாம் கனவு கண்டதில் ஒன்று இல்லாமல் பல வாட்ச் வைத்துள்ளார் ஒருவர். கோவைச் சேர்ந்த இவரிடம் உள்ள வாட்ச்களை நாம் அணியும் போது கடந்த காலத்திற்கு நம்மைக் கூட்டிச் சென்று விடும். அப்படிப்பட்ட வித்தைக்குச் சொந்தக்காரர் தான் கோவையைச் சேர்ந்த ஆசிப் இஸ்மாயில்.

ஆசிப் இஸ்மாயில் வைத்திருக்கும் வாட்ச் கடையில் கடந்த காலத்தில் பயன்படுத்திய மிகவும் பழமை வாய்ந்த பல வாட்சுகளை வைத்திருக்கிறார். இவருடைய கடைக்குச் சென்றால் 100, 150 வருடம் பழமையான வாட்ச்களை நேரில் காண முடியும். அதுபோன்ற வாட்ச்களை இவர் சரி பார்த்துக் கொடுத்து வருகிறார்.

உங்கள் பகுதியில் அமைந்திருக்கும் மருத்துவமனைகள், மருத்துவர்கள் குறித்து மேலும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

அந்த வாட்ச் கடை குறித்துக் கடையின் உரிமையாளர் ஆசிப் இஸ்மாயில் கூறுகையில், “கோயம்புத்தூர் சித்தாபுத்தூர் பகுதியில் time star வாட்ச் கடையைக் கடந்த 35 வருடங்களாக வைத்திருக்கிறேன். இது எங்களுடைய பரம்பரைத் தொழில். சுமார் நூறு வருடங்களாக இதைச் செய்து வருகிறோம். என்னுடைய தாத்தா, அப்பா அதன் பிறகு நான் வைத்திருக்கிறோம். எனக்குப் பிறகு இந்தத் தொழில் செய்ய ஆட்கள் இல்லை. இந்தத் தொழிலில் நானே கடைசியாக இருக்கலாம்.

நாங்கள் செய்யாத வாட்ச் கிடையாது. கைக்கடிகாரம், சுவர் கடிகாரம். கிராண்ட் பாதர், கிரான்ட் மதர் என்று சொல்வார்கள் அந்த கடிகாரம் வரை நான் வேலை செய்திருக்கிறேன். 12வது படிக்கும் போது நான் என் அப்பா கடைக்கு வந்திருக்கிறேன். அப்பொழுது எனக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது அதை என் அப்பாவும் கண்டுபிடித்தார். பிறகு அதை எனக்கும் சொல்லிக் கொடுத்தார்.

ஒரு மகனுக்கு இப்படி சொல்லித் தர வேண்டுமோ அப்படி சொல்லிக் கொடுத்தார். அதனால் இதுவரைக்கும் என்னால் தொழிலைச் செய்ய முடிகிறது. இதுவும் ஒரு அளவிற்குப் பின் அழிந்துவரும் தொழிலாக மாறிவிட்டது. இப்போதெல்லாம் தொலைபேசி, ஸ்மார்ட் வாட்ச் போன்றவை வந்துவிட்டதால் இந்த தொழில் குறைந்து வருகிறது.

இதையும் படிங்க: Valentine’s Day Story: எங்கள பாத்து கல்யாணத் தம்பதியும் ஹேப்பி ஆகிடுவாங்க… கலகல கப்பிள் ஃபோட்டோகிராபர்ஸ்…

ஆனால் இப்பொழுது மக்கள் பழங்காலத்து வாட்ச்கள் வைத்திருப்பவர்களைத் தேடி வருகிறார்கள். இதுபோன்ற வாட்ச் வேண்டும் என்றும் என்னிடத்தில் இந்த வாட்ச் இருக்கிறது அதை சரி பண்ண வேண்டும் என்றும் வருகிறார்கள். இந்த வேலை எனக்கு ஒரு ஆத்ம திருப்தி தருகிறது.

இந்த தொழில் அழிந்து கொண்டு வருகிறது நாம் இருக்கும் வரை இந்த தொழிலை மேம்படுத்துவோம் என்று பண்ணிக் கொண்டிருக்கிறேன். இந்த வேலை என்னுடைய ஆர்வத்தில் துவங்கியதால் நான் இன்னும் ஆர்வத்துடன் செய்து கொண்டிருக்கிறேன், இனிமேலும் செய்வேன். இந்த வேலையில் ஆர்வமாக இருப்பவர்களுக்குச் சொல்லியும் தருகிறேன்.

வெளிநாடுகளிலிருந்தும் எனக்கு வாட்ச் சரி செய்யக் கொண்டு வந்து தருகிறார்கள். நம் இந்தியர்கள் அங்கு இருந்து அவர்களுடைய வாட்ச்சை சரி செய்ய அனுப்புகிறார்கள். அவர்கள் வீட்டில் இருப்பவரின் வாட்ச்சுகளையும் அனுப்பி வைக்கிறார்கள்.

இதையும் படிங்க: Maxi Cap: கல்யாணம் முதல் காது குத்து வரை இந்த வண்டி தான்… 90ஸ் கிட்ஸின் travel king…

இப்பொழுது இருக்கிற மக்கள் எல்லாம் புதிதாக வீடு கட்டினாலும் இந்த பழமையான வாட்ச்சுகளை வீட்டில் வைப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். நான் 100 முதல் 150 வருடங்களான பழமையான வாட்ச்சுகளையும் நான் சரிபார்த்துக் கொடுத்திருக்கிறேன்.

சரி பண்ண முடியாத வாட்ச்களின் கிடைக்காத பாகங்களை நானே செய்து அந்த வாட்ச்களை சரி செய்து கொடுக்கிறேன். பலரும் அவர்களது தாத்தாவின் வாட்ச், என்னுடைய பரம்பரையாக வைத்துக் கொண்டிருக்கிறோம். இதை சரி செய்து கொடுங்கள் என்று நிறைய பேர் என்னிடத்தில் கொண்டு வந்து தருகிறார்கள்.

நிறைய பேர் என்னிடத்தில் அவர்கள் வைத்திருக்கும் வாட்ச்களின் பெயர்களை மட்டும்தான் சொல்வார்கள். நான் செய்து விடலாம் என்று சொல்வேன் பிறகு பார்த்தால் அந்த வாட்ச் மிகவும் பழுதடைந்து இருக்கும் நானும் சொல்லிவிட்டேன் சரி செய்து கொடுப்பேன் என்று அந்த வார்த்தைக்காக முயற்சி செய்து அந்த வார்த்தையும் சரி செய்து கொடுப்பேன்.

இதையும் படிங்க: Movie Storyboard: முழு படத்தையும் இந்த பேப்பர்ல பாத்துடலாம்… கணினி யுகத்திலும் மவுசு குறையாத ஸ்டோரி போர்டு…

அந்த மாதிரி வாட்ச் கொடுப்பவர்களும் எனக்கு நேரம் கொடுப்பார்கள் நீங்கள் எப்பொழுது சரி கொடுப்பீர்களோ அப்போது சரி செய்து கொடுங்கள் என்பார்கள். முழு ஈடுபாட்டுடன் இந்த வேலையை நான் செய்வதால் இந்த வார என்னால் செய்து முடித்துக் கொடுக்க முடிகிறது. ஈடுபாடு இல்லை என்றால் எந்த ஒரு தொழிலையும் வெற்றிகரமாகச் செய்ய முடியாது.

கஸ்டமர் கொடுக்கும் வாட்ச்களை தங்களுடைய வாட்ச் ஆக நினைத்து வேலை செய்தால் மிகவும் சிறப்பாகச் செய்து கொடுக்கலாம். மேலும், முழு கவனத்துடனும் செயல்பட வேண்டும் அந்த வாட்ச் முழுதும் செய்திருக்கும். நாம் அதில் உள்ள பழுதடைந்த பொருட்களை மட்டும் தான் சரி செய்து கொடுக்கிறோம் ஆகையால் சற்று நேரம் எடுத்தாலும் பரவாயில்லை முழுமையாகச் செய்து கொடுத்து விடலாம் ஆர்வம் இருந்தால்.

நானும் புதிதாக ஒரு வாட்ச் தயாரித்து இருக்கிறேன். ஒரு பொருள் செய்ய வேண்டும் என்றால் ஏற்கனவே செய்திருக்கும் அதனுடைய மாடல் ஒன்றுதான். ஆனால் நமக்குத் தகுந்தவாறு மாற்றும் பொழுது புதுப்புது டிசைன்கள் கிடைக்கும். ஆனால் அதனுடைய பயன் ஒன்றுதான். புதிதாகச் செய்வதற்கு நேரம் தேவைப்படும் நேரத்தைக் கொடுத்துச் செய்தால் வெற்றி நிச்சயம்” எனத் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *