கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள சிறுவாணி அடிவாரப் பகுதிகளான சாடிவயல் கோவை குற்றாலம் பகுதியை சுற்றி பழங்குடியினர் வாழும் மலை கிராமங்கள் உள்ளன. வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படும் என்பதால் கோவை குற்றாலம் மற்றும் மலை கிராமங்களுக்கு செல்லும் வாகனங்கள் அங்குள்ள (செக்போஸ்ட்) சோதனை சாவடி மாலை 5 மணிக்கு அடைக்கப்பட்டு மீண்டும் காலை 7 க்கு தான் திறப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று பிற்பகலில் அந்த சோதனை சாவடி அருகே உள்ள பழங்குடியினர் கிராம பகுதியில் உணவு, தண்ணீர் தேடி ஆக்ரோஷமாக சுற்றித் திரிந்த அந்த ஒற்றைக் காட்டு யானை அங்கு இருந்தவர்கள் பட்டாசு வெடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர். அதனை அங்கு சென்ற சுற்றுலா பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து உள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
கோவை குற்றாலம் பகுதியில் உணவு தேடி ஆக்ரோஷமாக உலா வந்த ஒற்றைக் காட்டு யானை : பட்டாசு சத்தம் கேட்டு வனப் பகுதிக்குள் சென்றது செல்போன் காட்சிகள் - சுற்றுலா பயணி எடுத்த வீடியோ வைரல் !!! 