300 ஆண்டுகள் பழமை வாய்ந்த 6 தலைமுறையினரால் வழிபடப்படும் மதுரை பசுமலை அருள் மிகு ஸ்ரீ மந்தையம்மன் திருக்கோவில் 2-வது மகா கும்பாபிசேகம் இன்று நடைபெற்றது.
கும்பாபிசேகத்தையொட்டி முன்னதாக ராமேஸ்வரம் கன்னியாகுமரி காசி போன்ற புனிதத் தலங்களில் இருந்து புனித நீர் கொண்டு இறைவனுக்கு அபிசேகம் செய்யப்பட்டது.
யாக பூஜை பல்வேறு மூலிகை பொருட்களுடன் நடத்தப்பட்டது. வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்களை ஓதினர். இந்த கும்பாபிசேக நிகழ்ச்சியின் போது அந்த பகுதி மக்கள் பக்தி பரவசத்துடன் இறைவனை பிரார்த்தினர். விழா நாளில் ஆயிரக்காண பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்த விழா கமிட்டி தலைவர் ரவிச்சந்திரன் கோவிலின் புராதான தொன்மையையும் கோவிலின் மகிமை குறித்தும் செய்தியாளர்களிடம் விளக்கினார். அப்போது இத் திருத்தலம் இறைவனின் திருவிளையாடல் புராணத்திலும் இடம் பெற்றுள்ளது என்று குறிப்பிட்டார்.
300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருக்கோவில் இப் பகுதி சமூகத்தினரின் 6 தலைமுறையினரால் வழிபடும் காவல் தெய்வமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் பழமை வாய்ந்த இத் திருக்கோவில் புனரமைக்கப்பட்டு கடந்த 2012-ம் ஆண்டு கால கட்டத்தில் முதல் கும்பாபிசேகம் நடைபெற்றது. இத் திருக்கோவில் கும்பாபிசேகத்திற்கான விரிவான ஏற்பாடுகளை மதுரை மா மன்ற கவுன்சிலரும் மாநகராட்சியின் கல்விக் குழு தலைவருமான எம்.பி.ஆர். ரவிச்சந்திரன் அருளானநந்தம் பாண்டி முருகன் துணை தலைவர் ஜெயராமன் செயலாளர் ஐ.பி.எஸ் பால முருகன் திமுக பிரமுகர் கணேசன் 93-வது திமுக வட்டச் செயலாளர் எம்.ஜெயராமன் விளாச்சேரி ஸ்தபதி கணேசன் செய்திருந்தனர்.
