மதுரை சி.இ.ஓ.ஏ பள்ளி நிறுவனர் ராசா கிளைமாக்சு கண்டுபிடித்த கணித தேற்றத்திற்கு உலக அளவில்
அங்கீகாரம் கிடைத்துள்ளது மேலும் அவர் எழுதிய புத்தகம் தஞ்சை தமிழ் பல்கலையிலும் பாடமாக
வைக்கப்பட்டுள்ளது.
சாதனையாளரும் சி.இ.ஓ.ஏ பள்ளி நிறுவனருமான ராசா கிளைமாக்சு நமது செய்தியாளருக்கு அளித்த
பேட்டி:
மதுரையில் சி. இ.ஓ.ஏ பள்ளி 1995-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சி.இ.ஓ.ஏ சொசைட்டி அதிகாரிகள்
சார்பில் தொடங்கப்பட்ட இந்த பள்ளியை 1995 இல் நிறுவினேன். நான்; நிறுவனத் தலைவர் ஆவேன்.
பள்ளி தொடங்கப்பட்ட போது வாடகைக் கட்டிடத்தில் இந்த பள்ளி இயங்கியபோது 43 மாணவர்கள்
இருந்தனர். கடந்த 19 ஆண்டுகளில் இந்த பள்ளிகள் மதுரை தேனி விருநகர் சிவகங்கை மாவட்டங்களில்
செயல்பட்டு வருகிறது. சி.இ.ஓ.ஏ கல்விக் குழுமம் சார்பில் 7 பள்ளிகளும் ஒரு கலை மற்றும் அறிவியல்
கல்லூரியும் செயல்பட்டு வருகின்றன. அதிக வசதி வாய்ப்பு இல்லாத காரியாப்பட்டியில் கலை மற்றும்
அறிவியல் கல்லூரியை நடத்தி வருகிறோம். விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் இந்த கல்லூரியில்
படித்த மாணவர்கள் அனைவரும் உரிய வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். அனைவரும் வேலை பெறும்
வகையிலேயே எங்களது கல்லூரியில் மிக உயரிய கல்வி போதிக்கப்படுகிறது.இதற்காக மாணவர்களுக்கு
உரிய முறையில் வழிகாட்டப்படுகிறது. எங்களது கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஓட்டுனர்
நடத்துனர் அலுவலக பணியாளர்கள் காவலர்கள் என 1000 க்கும் மேற்பட்டோர்
பணியாற்றுகின்றனர்.
இதுவரை கடநத 19 ஆண்டுகளில் சி. இ.ஓ.ஏ பள்ளி மாநில மற்றும் மாவட்ட அளவில தொடர்ந்து
முதலிடத்தை தக்க வைத்து வருகிறது. இந்த ஆண்டும் 12-ம வகுப்பு மற்றும் 10-ம வகுப்பு பொதுத்
தேர்வுகளில் மதுரை மாவட்டத்தில் முதலிடத்தை சி.இ.ஓ.ஏ பள்ளி மாணவர்கள் பெற்றிருக்கிறார்கள்.
எங்களுடைய தனிச் சிறப்பு ஒரே ஆண்டில 66 மாணவர்களை எம்.பி.பிஎஸ் படிப்புக்கான நுழைவுத்
தேர்வில் வெற்றி பெறச் செய்து அவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்பை
தொடர்கிறார்கள் என்பதாகும். ஐ.ஐ.டி மற்று என்.ஐ.டி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில்
பொறியியல் படிப்புக்களுக்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெறவும் பயிற்சி அளித்து வருகிறோம். இந்த
பயிற்சியைப் பெற்ற எங்களது மாணவர்கள் தற்போது நாடெங்கும் உள்ள IIT / NIT உயர் கல்வி
நிறுவனங்களில் பயின்று வருகிறார்கள்.
மதுரையில் சி. இ.ஓ. ஏ பள்ளியை நான் துவக்கியபோது நடுவண் அரசின் சுங்கம் மற்றும் கலால்
துறையின் ஆய்வாளராக இருந்தேன் பின்னர் கண்காணிப்பாளராகவும் பிறகு உதவி ஆணையராகவும்
பதவி உயர்வு பெற்று சேவையாற்றினேன்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த நான்(அலெசி. ராசா கிளைமாக்சு) தமிழிலும் கணிதவியலிலும்
பொருளியியலும் அதிக ஈடுபாடு கொண்டு அந்த துறைகளில் நிபுணத்தை பெற்றதை குறிப்பிட
வேண்டும்.தமிழின் மீது தீவிர ஈடுபாடு கொண்டு இலக்கண கூறுகளை திரைப்பட பாடல்கள் மூலம் நான்
விளக்கி எழுதிய “இனிக்கும் தமிழ்” என்ற புத்தகம் தற்போது தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில் முதுகலை
மாணவர்களுக்கு பாட புத்தகமாக வைக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகம் மதுரை யாதவா கல்லூரியிலும்
பாடப் புத்;தகமாக வைக்கப்பட்டுள்ளதை நான் பெருமிதமாக கருதுகிறேன். இந்த அங்கீகாரம் எனது தமிழ்
புலமைக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன்.
கணிதத்திலும் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. வடிவியலில்(ஜியோமெட்ரி) தேர்ச்சி அடைந்து நான் கண்டு
பிடித்த தேற்றம் உலக அளவில் ஏற்கப்பட்டு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. 1822-ம் ஆண்டு
ஜெர்மனிஅறிஞர் போயர்பேர்க் ஒரு முக்கோணத்தில் 6 சிறப்பு புள்ளிகளில் ஒரு வட்டம் செல்கிறது என
கண்டுபிடித்தார். இந்த கண்டு பிடிப்பு அந்த கால கட்டத்தில் பெரிய செய்தி. இதையடுத்து பிரெஞ்சு
அறிஞர் 9 புள்ளிகள் வழியாக அதே வட்டம் செல்கிறது என்றார். அதன் பின்னர் 200 ஆண்டுகளாக இந்த
வடிவியலில் முக்கோணத்தில் சிறப்பு புள்ளிகள் வட்டம் குறித்த கண்டு பிடிப்பு எதுவும் இல்லை. இந்த
நிலையில் 9 புள்ளி மட்டுமல்லாமல் 12 புள்ளி கள் வழியாக அச்சிறப்பு வட்டம் செல்கிறது என
நிருபித்தேன். எனது இந்த கணித தேற்ற கண்டுபிடிப்பை எய்மர் (AIMER) என்ற சர்வதேச கணித அமைப்பு
அங்கீகரித்து ஏகலைவன் என்ற விருதை வழங்கி கவுரவித்தது.
இந்த கணித தேற்ற கண்டு பிடிப்பை இத்தாலியில் நடந்த சர்வ தேச கணித வல்லனர்கள் மாநாட்டிலும்
எற்று என்னை வெகுவாக பாராட்டினர். ஒரு முக்கோணத்தில் ஒரு சிறப்பு வட்டம் 12 புள்ளியுடன்தான்
செல்லுமா அல்லது அதற்கு மேலும் 18 புள்ளிகளுடன் அந்த வட்டம் செல்லுமா என்பது குறித்தும்
தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறேன். 25- 30 புதிய கணித தேற்றங்கள் கொண்ட நூலை
எழுதியுள்ளேன். இதில் 12 புள்ளி தேற்றம் மிக புகழ் பெற்ற தேற்றமாக இருக்கிறது. அரசு நிதி உதவியுடன்
செயல்படும் அகில இந்திய கணித ஆசிரியர்கள் அமைப்பிலும் (AMTI) சென்னைக்கு சென்று பல முறை
அங்குள்ள கணிதவியலாளர்களுக்கு பாடம் எடுத்துள்ளேன்.
ஏங்களது சி. இ.ஓ.ஏ பள்ளியில் சேரும் ஆசிரியர்கள் தமிழ் மற்றும் கணித பாடங்களில் மேலும்
நிபுணத்துவம் பெற சிறப்பு வகுப்பு நடத்தி அவர்களது திறளை மேலும் மேம்படுத்தியுள்ளோம். இதனால்
எங்களது மாணவர்கள் மிகச் சிறந்த சாதனைகளை இந்த பாடங்களில் படைத்து வருகிறார்கள்.
பொறியியல் நுழைவுத் தேர்வுகளில் கடந்த 5-6ஆண்டுகளாக கட் ஆப் மதிப்பெண்களில் மேற்கூறிய
படிப்புகளில் 200/200 பெற்ற பள்ளியாகவும் எங்களது பள்ளி திகழ்கிறது.
6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பவுன்டேசன் கோர்ஸ் நடத்தி வருகிறோம். நீட் ஜே. இ.இ.
நுழைவுத்தேர்வுகளுக்கு செல்லும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உதவும் விதமாக கணிதம் வேதியியல்
உயிரியியல் போன்றவை பவுன்டே~ன் கோர்சில் மிகவும் சிறந்த முறையில் போதித்து மாணவர்கள்
நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற உதவுகிறோம்.
எங்களது பள்ளி பயிற்சி வாயிலாக கடந்த 8-9 ஆண்டுகளாக வெற்றி பெற்று 175 மாணவர்கள் அரசு
மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்பை தொடர்ந்துள்ளனர். இதே போன்று கடந்த 4-5
ஆண்டுகளாக ஐ.ஐ.டி காரக்பூர், என்.ஐ.டி திருச்சி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் எங்களது
மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். எங்களது சிறப்பு பயிற்சியில் நிபுணத்துவம் பெற்று நுழைவுத்
தேர்வுகளில் வென்று மாணவர்கள் சாதனை படைக்கிறார்கள்.
கிராமப்புற மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யும் விதமாக கலை அறிவியல் கல்லூரி
நடத்துவதைப் போல கிராமப்புற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு மருத்துவக் கல்லூரியை
துவக்கவும் திட்டமிட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
