TNPSC குரூப் 4 தேர்வு போட்டித்தன்மை : இத்தேர்வுக்கு மட்டும் சுமார் 13 லட்சத்து 89 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 11 லட்சத்து 48 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். அதாவது. ஒரு பதவிக்கு சுமார் 287 பேர் போட்டி போடுகின்றனர். வெற்றி வாய்ப்பு விகிதம் (Selection Rate) என்பது சற்றேர்குறைய ≈0.35% ஆகும். அதாவது, 1,000 பேரில் குறைந்தது 3.5 பேர் மட்டும் தான் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழ்நாடு அரசுத் துறைகளில் லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், வெறும் 4662 பேரை மட்டும் தேர்வு செய்ய குரூப் 4 தேர்வு அறிவிப்பை வெளியிடுவதாக என தேர்வர்களும், அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

