Last Updated:
நெல்லை மாவட்ட கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கான அக்டோபர் 11ஆம்தேதி எழுத்து தேர்வு நடைபெற உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் செயல்படுகின்றன. இங்கு காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக விண்ணப்பதாரர்களிடம் இருந்து இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இப்பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு அக்டோபர் 11ஆம்தேதி காலை 10 முதல் 1 மணி வரை பாளை தூய யோவான் மேல்நிலைப்பள்ளிதேர்வு மையத்தில் நடைபெறுகிறது. தேர்வுக்கான நுழைவுச் சீட்டினை நெல்லை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் இணையதள முகவரியான www. drbtny.in லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வு நடைபெறும் நாளன்று ஹால் டிக்கெட்டை கொண்டு வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இது தொடர்பான விரிவான விபரங்கள் நெல்லை மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய இணையதளத்தில் www.drbtny.in வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தை 0462-2560575 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tirunelveli,Tirunelveli,Tamil Nadu
October 07, 2025 11:13 AM IST

