Last Updated:
Cooperative Bank Job | இந்தத் தேர்வு அக்டோபர் 11 காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மாநிலம் முழுவதும் நடைபெறுகிறது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக நேர்முகத் தேர்வு (Interview) நடைபெறும்.
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் உள்ள உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் பணியாளர் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வமாக ஆகஸ்ட் 6 முதல் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் மொத்தம் 2,581 காலிப்பணியிடங்கள் உள்ளன.
அரியலூரில் 28, செங்கல்பட்டில் 126, சென்னையில் 194, சேலத்தில் 148, திருவண்ணாமலையில் 109, திருப்பூரில் 112, மதுரையில் 100, கோயம்புத்தூரில் 90, தூத்துக்குடியில் 90 என பல்வேறு மாவட்டங்களில் அதிகளவிலான காலிப்பணியிடங்கள் உள்ளன. குறைந்தளவிலான காலியிடங்கள் நாகை (18), தேனி (31), ராமநாதபுரம் (32) போன்ற மாவட்டங்களில் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி DRB இணையதளம் மூலமாகவே ஆன்லைன் விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் (candidates) குறைந்தபட்சம் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். அதனுடன், கூட்டுறவு பயிற்சி (Cooperative Training) கட்டாயமாகும். கூட்டுறவு சார்ந்த பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு கூடுதல் பயிற்சியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. விண்ணப்பப் படிவத்தில் பெயர், பிறந்த தேதி, முகவரி, கல்வித் தகுதி, புகைப்படம், கையொப்பம் உள்ளிட்ட விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். கல்விச் சான்றிதழ்களின் நகலும் கட்டாயமாகப் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
அனைத்து விண்ணப்பதாரர்களும் எழுத்துத் தேர்வில் பங்கேற்க வேண்டும். இந்தத் தேர்வு அக்டோபர் 11 காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மாநிலம் முழுவதும் நடைபெறுகிறது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக நேர்முகத் தேர்வு (Interview) நடைபெறும். இறுதியாக எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிட்டு, தகுதியானவர்கள் பணியில் அமர்த்தப்படுவர்.
இந்த அறிவிப்பு, வேலைவாய்ப்பு தேடிக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகளுக்கு நம்பிக்கை ஊட்டுகிறது. குறிப்பாக கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
August 23, 2025 12:54 PM IST
