Last Updated:
இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான தேர்வுக்கு இணைய வழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 3 ஆயிரத்து 600 காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், தமிழ்நாட்டில் காவலர்கள் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வருடத்துக்கான காலி பணியிடங்களை சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்திருக்கிறது. அதன்படி, இரண்டாம் நிலை காவலர்கள் 2,833 பணியிடங்கள் , சிறைக் காவலர்கள் 180 பணியிடங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 631 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான தேர்வுக்கு இணைய வழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆகஸ்ட் 22ம் தேதி (நாளை) முதல் செப்டம்பர் 21ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 25ம் தேதி விண்ணப்பத்தில் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்றும், எழுத்து தேர்வு நவம்பர் 09ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 1,299 எஸ்.ஐ. காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பு காரணமாக தேர்வை ஒத்திவைத்து குறிப்பிடத்தக்கது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
August 21, 2025 8:15 AM IST

