Last Updated:

விண்ணப்பம் செய்வது எப்படி? www.trb.tn.gov.in  என்ற இணையத்தளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தேர்வு வாரியம்
ஆசிரியர் தேர்வு வாரியம்

நிர்வாக காரணங்களினால் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிட்துள்ளது. முன்னதாக,  2025ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி  தேர்வுக்கான அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம்  இணையதளத்தில் (Website: http://www.trb.tn.gov.in)  வெளியிட்டது.

இத்தேர்விற்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் இணைய தளம் வாயிலாக (Online Application) விண்ணப்பிக்க 11.08.2025 முதல் 08.09.2025 பிற்பகல் 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக தாள்-Iற் கான கணினி வழி தேர்வு நவம்பர் மாதம் 1ம் தேதி நடைபெறும். தாள் –II ற் கான கணினி வழி தேர்வு நவம்பர் மாதம் 2ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. 

இருப்பினும், நவ.2ம் தேதி கல்லறை திருநாள் என்பதால் ஆசிரியர் தகுதித் தேர்வு தேதியை மாற்றி, வேறு ஒரு தேதியில் நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், தேர்வு வாரியம் தேர்வு தேதியை மாற்றி அறிவித்துள்ளது.  அதன் படி, தாள் 1  நவம்பர் 15ம் தேதியும்,  தாள்- II 16ம் தேதியும் நடைபெறும் என தேர்வு வாரியம் தற்போது அறிவித்துள்ளது.  

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்: தாள் -2 தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க இளங்கலை பட்டம் மற்றும் தொடர்புடைய இளங்கியல் கல்வியியல் பட்டமும் பெற்றிருக்க வேண்டும் (Graduation and passed or appearing in final year of 2-year Diploma in Elementary Education) . தாள்I ற்கு தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க 12ம் வகுப்பு தேர்ச்சியும் தொடக்க கல்வியில் பட்டய படிப்பும் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பம் செய்வது எப்படி? www.trb.tn.gov.in  என்ற இணையத்தளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *