Last Updated:

International Women’s Day 2025| சிவரஞ்சனி, தனக்கென ஒரு அடையாளம் உருவாக்க வேண்டும் என பெண் சிறகுகள் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து, ஐந்து ஊழியர்களுக்கு மேல் வேலைக்கு வைத்து மூன்று வருடமாக வெற்றிகரமாக இந்நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

X

மாதம்

மாதம் 50,000- க்கு மேல் வருமானம் – சுயதொழிலில் சாதனை செய்த பெண்

படிப்பு வரல, நீ என்ன பண்ண போறன்னு குடும்பமே ஏளனமா பாத்துச்சு என்னைய… படிப்பு இல்லையென்றால் என்ன? சுயதொழில் செய்து சாதித்து காட்டுவேன் என்று ”தையல்” கலையில், சாதித்து காட்டியுள்ளார் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பெண்மணி சிவரஞ்சனி. 

பெண்களாய் பிறந்த அனைவருக்கும் சுதந்திரமாய் தன் திறமையால் ஏதாவது சாதித்து காட்ட வேண்டும் என்ற ”தன்னம்பிக்கை” அதிகமாகவே இருக்கும். குடும்பத்திலும் சரி, சமூகத்திலும் சரி, மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக, முதன்மையாக இருக்க வேண்டும் என்பதில் பெண்களுக்கு அதிக ஆர்வம் உண்டு. படிப்பு இருந்தால் மட்டும் தான் சாதிக்க முடியும் என்று இருந்துவிடாமல், எந்த ஒரு கலையிலும் ஆர்வம், தன்னம்பிக்கை, உழைப்பு, பயிற்சி இருந்தால் கண்டிப்பாக தனக்கென ஒரு இடத்தை உருவாக்கலாம் என தன்னம்பிக்கையுடன் மிளிர்கிறார் சிவரஞ்சனி…

விழுப்புரம் மாவட்டம் மாம்பழப்பட்டு ரோடு பகுதியை சேர்ந்த சிவரஞ்சனி (38) என்ற பெண்மணி. ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவர். குடும்பத்தில் அனைவருமே படித்தவர்கள். ஆனால் இவருக்கு பதினொன்றாம் வகுப்புக்கு மேல் படிப்பு மண்டையில் சுத்தமாக ஏறவில்லை. படிப்பில்ல நீ என்ன பண்ண போறன்னு குடும்பம் எடுத்த முடிவு தான் திருமணம்.

இரண்டு மகள்களுக்கு தாயான சிவரஞ்சனி அவ்வளவுதான் நம் வாழ்க்கை முடிந்தது என்று நினைக்கும் போது,.. 2005 இல் தான் கற்ற ஒரு ஆறு மாத தையல் பயிற்சி வகுப்பு அவருக்கு கை கொடுத்தது. பின்பு சிவரஞ்சனியின் கணவரான செந்தில் ஆதரவுடன் தன்னுடைய தன்னம்பிக்கையான வாழ்க்கை பயணத்தை தொடங்க ஆரம்பித்தார். தையல் பயிற்சி வகுப்பில் கிடைக்கும் சிறிய சிறிய வாய்ப்புகள் கூட தவறவிடாமல், தனக்கு சாதகமாக பயன்படுத்தி அனைத்து கலைகளையும் கற்று தேர்ந்தார்.

இதையும் வாசிக்க: Women’s Day: மகளிர் தினம் எப்படி உருவாகியது..? ரஷ்ய போராட்டம் முதல் இன்று வரை! முழுவிவரம் இதோ…

அதன் பிறகு இந்தியன் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூலம் வழங்கப்பட்ட பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு சிறந்த மாணவியாக வெளியே வந்தார் சிவரஞ்சனி. அதன் பிறகு அதே பயிற்சி நிறுவனத்திற்கு சிறந்த பயிற்சியாளராக மற்ற மாணவர்களுக்கு சொல்லித் தரும் அளவிற்கு உயர்ந்து வந்தார்.

அதுபோல 15 வகுப்புக்கு மேல் மற்ற மாணவர்களுக்கு தையல், ஆரி ஒர்க், எம்ப்ராய்டரி போன்ற பயிற்சி வகுப்புகளை எடுத்துள்ளார். இது மட்டும் போதாது என எண்ணிய சிவரஞ்சனி, தனக்கென ஒரு அடையாளம் உருவாக்க வேண்டும் என ”பெண் சிறகுகள்” நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து, ஐந்து ஊழியர்களுக்கு மேல் வேலைக்கு வைத்து மூன்று வருடமாக வெற்றிகரமாக இந்நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இந்நிறுவனம் மூலம் மற்ற மாணவர்களுக்கு மூன்று வேளை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. ஆரி வொர்க், எம்ப்ராய்டரி, தையல் வகுப்பு போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. சில நாட்களில் மற்ற மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் கூட நடத்துகிறார்கள். படிப்பு வரல நீ என்ன பண்ண போறன்னு ஏளனமாக பேசினவங்க மத்தியில், ”பெண் சிறகுகள்” என்ற நிறுவனம் மூலம், மாதம் ரூ.50,000 வரை வருமானம் ஈட்டி மற்ற பெண்களுக்கும் ஒரு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார் சிவரஞ்சனி.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *