Last Updated:
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மதுரை வண்டியூர் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் தெப்பதிருவிழா ஏன் கொண்டாடப்படுகின்றது என்று தெரியுமா?
தூங்கா நகரம், கோவில் நகரம் என்று மதுரைக்கு பெயர்கள் இருப்பது போல திருவிழா நகரும் என்ற பெயரும் மதுரைக்கு உண்டு. ஏனென்றால் மதுரையில் நடைபெறும் திருவிழாவிற்கு பின்னால் ஒவ்வொரு கதைகள் இருக்கின்றது.அப்படி, மதுரையில் நடைபெறும் உலக புகழ்பெற்ற சித்திரை திருவிழாவிற்கு பின்னால் எவ்வளவு பெரிய கதை இருக்கின்றதோ, அதற்கு அடுத்தபடியாக மதுரையில் நடைபெறும் வண்டியூர் மாரியம்மன் தெப்பத் திருவிழாவிற்கு பின்னால் நாயக்க மன்னர்களின் கதை இருக்கின்றது.
அதாவது எப்பொழுதுமே மதுரையில் நடைபெறும் திருவிழாவிற்கு மதுரை மக்களால் சொல்லப்படும் புனை கதை ஒன்றும், திருவிழா குறித்த வரலாறு கதை என்று இரண்டு விதமான கதைகள் மதுரை மாநகர் முழுவதும் நிறைந்து இருக்கின்றது.இப்படி 400 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் மன்னர் நாயக்கர் மஹாலை கட்டுவதற்காக வண்டியூர் பகுதியில் அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த மக்கள் மூலமாக மண் தோண்டி அதனை எடுத்துச் சென்று நாயக்கர் மஹாலைகட்டியதால் இப்பகுதியில் பிரம்மாண்டமான பள்ளம் ஏற்பட்டது. இதனை பார்த்த நாயக்கர் மன்னர் இப்பள்ளத்தை பிரம்மாண்டமான குளமாக மாற்றி விடலாம் என்று எண்ணி நான்கு புறமும் தடுப்பு சுவர்கள் எழுப்பப்பட்டு 40 ஏக்கர் பரப்பளவில் மாபெரும் தெப்பக்குளம் உருவானதாக மதுரை மக்கள் மத்தியில் ஒரு புனை கதை பரவலாக சொல்லப்பட்டு வருகின்றது.
அதே திருவிழாவின் வரலாற்றுக் கதை என்று பார்த்தால்,காலத்தில் பாண்டிய நாட்டில் மிகப்பெரிய குளத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்த நாயக்க மன்னர் அப்பகுதியில் இருக்கக்கூடிய அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த மக்கள் மூலமாக இக்குளத்தை 40 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கினார். பிறகு மதுரை மீனாட்சி மீது அதீத பிரியம் கொண்ட நாயக்க மன்னர் தனது பிறந்தநாள் தினமான தைப்பூச தினத்தை இத்தெப்பகுளத்தை திறந்து வைத்து அதில் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் ஆகியோர் எழுந்தருள செய்து 400 ஆண்டுகளுக்கும் முன்பு மாபெரும் தெப்பத் திருவிழா என்ற திருவிழாவை உருவாக்கினார்.
அதில் குறிப்பாக இத்தெப்பகுளம் உருவானதற்கு அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த மக்கள் மிகவும் பாடுபட்ட காரணத்தினால் அவர்களுக்கு நன்றி செலுத்தக்கூடிய வகையில் நாயக்க மன்னரின் கட்டளைக்கு இணங்க தற்பொழுது வரை அப்பகுதி மக்கள் தான்இத்தெப்பகுளத்தை வடம் பிடித்து இழுத்து வருகின்றார்கள். இது இன்றளவும் நடைமுறையில் இருப்பது என்பது மிகவும் ஆச்சரியமாகும் உள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Madurai,Madurai,Tamil Nadu
February 05, 2025 10:33 AM IST
வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பத் திருவிழா : இதற்கு பின்னால் இவ்வளவு பெரிய கதை உள்ளதா ?

 
                    