Last Updated:
தைப்பூச விழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சி தங்க பல்லாக்கில் சித்திரை வீதிகளில் வீதி உலாவாக வந்தனர்.
பாண்டிய குல பேரரசி பாண்டிய நாட்டுக்கு அரசி என்று சொல்லக்கூடிய மதுரை மீனாட்சிக்கு ஒவ்வொரு மாதமும் விசேஷமான திருவிழாக்கள் நடைபெறும். இப்படி நடைபெறும் திருவிழாவில் மதுரை மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரர் பிரியாவிடை ஆகியோர் சிறப்பு அலங்காரத்துடன் வீதி உலா வந்து மதுரை மக்களுக்கு காட்சியளிப்பார்கள். இதனை காண கோடான கோடி மக்கள் காத்திருந்து தரிசனம் செய்வார்கள்.
அந்த வகையில், இந்த ஆண்டிற்கான தைப்பூச திருவிழா கொடி ஏற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி, கடந்த ஆறு நாட்களாக மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரர் ஆகியோர் ரிஷப வாகனம், மயில்வாகனம், அன்ன வாகனம், குதிரை வாகனம், சேஷ வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாலை நேரத்தில் சித்திரை மற்றும் மாசி வீதிகளை சுற்றி வீதி உள்ளக வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
இதனை அடுத்து தைப்பூச திருவிழாவின் 8-வது நாளை முன்னிட்டு, அம்மன் சன்னதி வழியாக மதுரை மீனாட்சி சிறப்பு அலங்காரத்துடன் தங்க பல்லாக்கில் எழுந்தருளி வீதி உலாவாக சென்றனர். அதாவது அம்மன் சன்னிதி வழியாக கோவிலின் பார்வதியான மேளதாளங்களுடன் இன்னும் செல்ல, ஜொலிக்கும் தங்க குதிரை வாகனத்தில் சுந்தரேஸ்வரர் பிரியாவிடை ஆகியோர் வீதி உலாவாக சென்றனர். அதனை தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட தங்க பல்லாக்கில் சிறப்பு அலங்காரம் மற்றும் கம்பீரத் தோற்றத்தில் மதுரை மீனாட்சி எழுந்தருளி சித்திரை வீதிகளில் வீதி உலாவாக சென்றனர். இந்நிகழ்வை காண்பதற்கு என்று தினமுமே மதுரை மக்கள் மற்றும் வெளிநாட்டவர் என அனைவரும் காத்திருந்து திருவிழாவை பார்த்துவிட்டு செல்கின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Madurai,Madurai,Tamil Nadu
February 09, 2025 10:22 AM IST

 
                    