Last Updated:
தைப்பூசம் தெப்ப திருவிழாவை முன்னிட்டு மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் முருகப் பெருமான் மற்றும் தெய்வானை ஆகியோர் எழுந்தருளி வைர தேரோட்டம் நடைபெற்றது.
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு மாதமும் விசேஷமான திருவிழாக்கள் நடைபெறுவது என்பது வழக்கம்.அந்த வகையில், இந்த ஆண்டுக்கான தைப்பூசம தெப்பத் திருவிழா கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு முருகப்பெருமான் தெய்வானையுடன் காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் தங்க மயில் வாகனம், அன்னவாகனம், வெள்ளி பூத வாகனம், பச்சைக் குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகிறார்.
விழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் திருமஞ்சனம் மஞ்சள் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று பின்பு 16 கால் மண்டபம் அருகே உள்ள தேரில் சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார்.அங்கு ஆண்கள், பெண்கள் என பக்தர்கள் அனைவரும் வடம் பிடித்து இழுக்க தேர் கீழ ரத வீதி, மேல ரத வீதி, பெரிய ரத வீதிகள் வழியாக வலம் வந்தது.
இந்நிகழ்வினை பார்க்க மதுரை மற்றும் மதுரை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் கூடி இருந்து அரோகரா, முருகா என்ற கோஷங்கள் எழுப்பி முருகப்பெருமானின் தரிசனம் செய்தனர்.அதேபோல் நாளை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தெப்பத் திருவிழா காலை 10 மணி அளவில் தெப்பத்தில் நடைபெற இருக்கின்றது என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Madurai,Madurai,Tamil Nadu
February 09, 2025 12:52 PM IST
