மணப்பாறை, திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பள்ளிகள் அளவிலான வில்வித்தை மற்றும் ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீகுரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் தங்கம் வென்றார்.
மணப்பாறையில் மணப்பாறையில் பள்ளிகள் அளவிலான வில்வித்தை மற்றும் ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை மணப்பாறைபட்டி போர்ட் ஸ்போர்ட் அகாடமி வளாகத்தில் நடைபெற்றது. இதில் திருச்சி அளவிலான பள்ளிகளிலிருந்து சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். இதில் 3 வயது முதல் 14 வயது வரை மாணவர் மற்றும் மாணவியர்களுக்கு தனித்தனி பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. வில்வித்தை போட்டியில் ஸ்ரீகுரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் முகுந்த் முதலாவது இடத்தை பிடித்து தங்க நாணய பரிசினை வென்றார். திருச்சி தி இந்தியன் பப்ளிக் பள்ளி மாணவர் ரித்விக்குமரன் இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளி நாணயம் பெற்றார். அகாடமி நிறுவனர் எம்.வேலுச்சாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஸ்ரீகுரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் மா. ராட்சி ரெட்டி வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார். வெற்றி பெற்ற அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் கோப்பைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை அகாடமி நடத்துனர் வி.ஜெகன் செய்திருந்தார்.

