மதுரை பை பாஸ் சாலையில் உள்ள துரைசாமி நகர்  மக்க ள்    நலச் சங்கத்தின் 28-வது ஆண்டு விழா 1.2.2025 அன்று இரவு நடைபெற்றது.

 இந்த நிகழ்ச்சியில் தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்

இந்த நிகழ்ச்சியில் துரை சாமி நகரின் மேம்பாடுகளை பாராட்டிய அவர் பெண்களுக்கு கல்வி வேலைவாய்ப்பு சொத்து உரிமை என அனைத்து துறைகளிலும் சம உரிமை அளிக்கப்படுவதால் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகச்சிறப்பாக இருக்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி சராசரியை விட நமது மாநிலம் இரண்டு மடங்குக்கு மேல் உள்ளது

நாட்டின் தலைச் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

நிகழ்ச்சியில் துரைசாமி நகர் மக்க ள்     நலச் சங்கத்தின் புரவலர் எஸ்.எஸ் கன்ஸ்ட்ரக்சன் உதய குமார் அக சிதா உதயகுமார்  சங்க  தலைவர் கோவிந்தன் துணை தலைவர் செயலாளர் கோவிந்த ராஜ் பொருளாளர் வருசை முகமது துணை தலைவர்; உமா மகேஸ்வரி இணைச் செயலாளர் பாலு 70-வது வார்டு கவுன்சிலர் அமுதா தவமணி 70-வது வட்ட திமுக செயலாளர் பாலா சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *