Last Updated:
தைப்பூசத் திருவிழாவின் ஆறாவது நாளை முன்னிட்டு காமதேனும் வாகனத்தில் காட்சியளித்த மதுரை மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரர்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் விசேஷமான திருவிழாக்கள் நடைபெறுவது என்பது வழக்கம். இதில் குறிப்பாக சித்திரை திருவிழா மற்றும் ஆடி முளை கூட்டு திருவிழா, ஆவணி மூலத் திருவிழா, தைப்பூச திருவிழா போன்ற திருவிழாக்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த வகையில், இந்த ஆண்டிற்கான தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இத்திருவிழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரர் ஆகியோர் தினமும் மாலை நேரத்தில் அன்ன வாகனம், ரிஷப வாகனம், மயில் வாகனம், சேஷ வாகனம், தங்க குதிரை வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சித்திரை வீதிகளை சுற்றி மக்களுக்கு அருள்பாளிப்பர்.
இதனை அடுத்து தைப்பூசத் திருவிழாவின் ஆறாவது நாள் முன்னிட்டு, மீனாட்சி அம்மன் கோவிலின் அம்மன் சன்னதியில் இருந்து தங்க காமதேனும் வாகனத்தில் சுந்தரேஸ் பிரியா விடை ஆகியோரும் வெள்ளி காமதேனும் வாகனத்தில் மதுரையில் மீனாட்சி அம்மன் எழுந்தருளினார்.
Also Read: இந்த ராசியினருக்கு இன்று வெற்றிகரமான நாளாக அமையும்..! பிப்ரவரி 07, 2025
பின்பு மீனாட்சி அம்மன் கோவிலின் பார்வதி யானை முன் செல்ல, தங்கம் மற்றும் வெள்ளி காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய மீனாட்சி மற்றும் சுவாமி ஆகியோர் அம்மன் சன்னதி வழியாக சிவாச்சாரியாரின் மேள தாளங்களுடன் நான்கு சித்திரை வீதிகளையும் சுற்றி வலம் வந்து மதுரை மக்களுக்கு அருள் பாலித்தனர். காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரரை காண வேண்டும் என்று மதுரையை சுற்றி உள்ள மக்கள் அனைவரும் சித்திரை வீதிகளில் காத்திருந்து அம்மனின் தரிசனத்தை பெற்று சென்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Madurai,Madurai,Tamil Nadu
February 07, 2025 10:48 AM IST
