Last Updated:
Wild Elephant Roaming on Road: வால்பாறை அருகே திடீரெனச் சாலையில் வந்த காட்டு யானையால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
வால்பாறை அருகே உள்ள சோலையார் எஸ்டேட் முனீஸ்வரர் கோவில் முன்பு சாலையில் பேருந்தை மறித்து நின்ற ஒற்றை காட்டு யானையால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே வனப்பகுதியை விட்டு வெளியேறும் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அதேபோல், தற்போது வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியில் நீர் நிலைகளில் தண்ணீர் குறைந்து வருவதால் தண்ணீரைத் தேடியும் யானை, சிறுத்தை உள்ளிட்ட பல வனவிலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்புக்குள் உலா வருகிறது.
இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள சோலையார் சாலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை அப்பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோவில் பகுதியில் சாலையில் நின்றதால் அவ்வழியாகச் சென்ற அரசு பேருந்து மற்றும் தேயிலை எஸ்டேட் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட நேரம் காத்திருந்தது.
இதையும் படிங்க: Coimbatore Mini Bus Service: கோவைக்கு மீண்டும் வருது மினி பஸ் சேவை… மே 1 முதல் பயணிகள் பவனி வரலாம்…
பின்பு வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையின் வேட்டைத் தடுப்பு காவலர்கள் சாலையில் நின்றிருந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டிய பிறகு அரசு பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் அப்பகுதியிலிருந்து நகர்ந்து சென்றது.
மேலும், தற்போது அந்தப் பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி வனத்துறை வேட்டைத் தடுப்பு காவலர்கள், யானைகள் குடியிருப்புப் பகுதிக்குள் வராமல் தடுக்கும் வகையில் சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Coimbatore,Tamil Nadu
February 08, 2025 9:23 PM IST
