கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று காப்பி வித் கமிஷனர் என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவை, மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள கார்ப்பரேஷன் மிடில் ஸ்கூல் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
மாநகர காவல் ஆணையாளர் சரவண சுந்தர் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் போஸ்கோ சட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
சைபர் கிரைம் குற்றங்கள் பெருகி வரும் இந்த காலத்தில், மாணவர்கள் இணையத்தைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது எப்படி என்பது குறித்தும், போஸ்கோ சட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அதன் தண்டனைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
இந்த கலந்துரையாடல் மாணவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்தது என்றும், இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்றும் மாணவர்கள் தெரிவித்தனர்.

