மதுரை கோச்சடையில் குயின் மீரா சர்வதேசப் பள்ளியில் பாட்மின்டன் அகாடமி இன்று(5.2.2025) தொடங்கப்பட்டது. இந்த அகாடமியை முன்னாள் ஆல் இங்கிலாந்து சாம்பியனும் இந்தியாவின் புகழ் பெற்ற பயிற்சியாளருமான பத்ம பூ~ன் புல்லேலா கோபிசந்த்; தொடங்கி வைத்தார். தமிழகத்தில் தலைச் சிறந்த இளம் பாட்மின்டன் வீரர்களை உருவாக்கும் விதமாக இந்த பாட்மிண்ட்டன் அகாடமி துவக்கப்பட்டுள்ளது.
குயின் மீரா சர்வதேசப் பள்ளியும் ஹைதராபாத் செலிபரேட் ஸ்போர்ட்ஸ் பவுன்டேசனும் இணைந்து இந்த பாட்மின்டன் அகாடமியை தொடங்கியுள்ளன.
செலிபரேட் ஸ்போர்ட்ஸ் பவுன்டேசனில் புல்லேலா கோபிசந்த் மற்றும் சர்வதேச புகழ்பெற்ற பயிற்சியாளர்கள் உள்ளனர். அவர்கள் குயின் மீரா பள்ளியில் அமைந்துள்ள அகாடமியில் உள்ள பாட்மிண்டன் வீரர்களுக்கு உரிய பயிற்சி திட்டங்களை மேற்கொள்கிறார்கள்.
குயின் மீரா பள்ளி பாட்மிண்டன் அகாடமியை தொடங்கி வைத்த பின்னர் சர்வதேச புகழ் பெற்ற தேசிய தலைமை பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில்
கடந்த காலங்களை காட்டிலும் தற்போது விளையாட்டு துறையில் இளம் தலைமுறையினர் அதிகளவில் ஈடுபடுகிறார்கள். குயின் மீரா போன்ற பள்ளிகள் கல்வியில் மட்டுமல்லாமல் விளையாட்டுத்துறைக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். தமிழகத்தில் தற்போது சிறந்த வீரர்கள் உருவாகி வருகிறார்கள். நாங்கள் அவர்களை கவனத்தில் கொண்டுள்ளோம். இந்த தலைச் சிறந்த வீரர்களை தேர்வு செய்து அவர்களது திறனை மேலும் மேம்படுத்துவோம். தற்போது விளையாட்டு வாழ்வியலில் முக்கியம் என்கிற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இது வரவேற்க தக்கது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புல்லேலா கோபிசந்த் ஒலிம்பிக் மற்றும் காமன் வெல்த் போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாடி சாதனை படைத்த சாய்னா நேவால் மற்றும் பி.வி.சிந்து போன்ற வீராங்கனைகளுக்கு பயிற்சியாளரர் ஆவார்.
இந்த பாட்மிண்டன் அகாடமி தொடங்கப் பட்ட தருணத்தில் குயின் மீரா சர்வதேசப் பள்ளியின் மாணவர்களுக்கான புதிய உடற் பயிற்சி கூடத்தையும் புல்லேலா கோபிசந்;த் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக செலிபரேட் ஸ்போர்ட்ஸ் பவுன்டேசன் நிறுவன இயக்குனர் பிரபாகர் பாஸ்கர் தேசிய அளவிலான ஜூனியர் தடகளப் பயிற்சியாளர் நாகபுரி ரமே~; ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
மதுரை குயின் மீரா சர்வதேசப் பள்ளி தேசிய அளவில் கல்வியிலும் விளையாட்டிலும் ஒரே நேரத்தில் தனது மாணவர்களை சாதனை படைக்கச் செய்துள்ளது. இப் பள்ளி மாணவர்களில் 33 சதவீதத்தினர் ஒரே நேரத்தில் கல்விச் சாதனையாளராகவும் விளையாட்டுத் துறை சாதனை படைப்பவர்களாகவும் இருப்பது குறிப்பிடத் தக்கது.
பள்ளியின் தாளாளர் டாக்டர் சி. சந்திரன் கூறுகையில் செல்போன் பிடியில் இருக்கும் இளம் தலைமுறையினரை உடல் ஆரோக்கிய வி~யத்தில் கவனம் செலுத்தும் விதமாக இந்த பள்ளியில் பாட்மிண்டன் அகாடமி தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
குயின் மீரா சர்வ தேசப் பள்ளியின் நிர்வாக இயக்குனர் அபிநாத் சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில் கல்வி மட்டுமே ஒரு மனிதனை முழுமையாக்கிவிடாது. கல்விக்கு நிகரான விளையாட்டுத் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் உலகம் முழுவதும் சிறுவர்கள் உடல் பருமன் பிரச்சனையில் சிரமப்படுகிறார்கள். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண விளையாட்டுத் துறையில் உடல் ஆரோக்கியத்தை பேண வேண்டும் என்றார். செய்தியாளர்கள் சந்திப்பின் போது பள்ளியின் கல்வி இயக்குனர் சுஜாதா குப்தன் நிர்வாக துணை இயக்குனர் ~Pபா ஆகியோர் உடன் இருந்தனர்.
பாட்மிண்டன் அகாடமி தொடங்கப்பட்டதருணத்தில் மாநில சப்-ஜூனியர் பாட்மிண்டன் போட்டி இன்று முதல்(பிப்5) பிப் 9-ம் தேதி வரை பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.
